தமிழ்நாடு மாநில இரத்தம் மாற்று வாரியம்
சார்பில் உலக குருதி நன்கொடையாளர் தின விழா சென்னை ஓமந்தூரார்அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடந்தது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த பல வருடங்களாக இரத்ததானம் செய்து வருகின்றனர்.
இதில் தொடர்ச்சியாக இரத்ததானம்
செய்த 18 பேர்களுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் மூலமாகசான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து கூடுதலாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைஇரத்த வங்கியின் பரிந்துரையின் பேரில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவரணி செயலாளர்சர்புதீன் தொடர்ச்சியாக 50 முறை இரத்ததானம் வழங்கியதற்காக அவருக்குசாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டுஇரத்தம் நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சர்புதீன் கூறுகையில்,
இந்த பணிகளை இறைவனுக்காக அனைத்து சமூக மக்கள் நலனுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினுடைய வழிகாட்டுதலோடு நாங்கள் செய்துவருகிறோம்.
என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் தாரேஸ் அகமது கலந்து கொண்டார்.