சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உதகை கூடலூர் செல்லும்சாலை யிலுள்ள 'பைன்" மரக்காடுகள் உள்ளன. லட்சக்கணக்கான பைன்மரங்கள் நடுவதற்கான முக்கிய காரணம் "வனமயமாக்கல் மற்றும்பாலைவனமாக்கலை தடுத்தல் மட்டுமல்லாது
சர்வதேச சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் இடமாகவே இப்பகுதிகள்திகழ்கின்றன.

வானுயர நேராக கிளைகள் இல்லாமல் வானுயர வளர்ந்துநிற்கும் இக்காடுகள் மிகப்பெரிய அழகுதான்.
.
இஸ்ரேலில்தான் பைன் மரக்காடுகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன.
60% நிலம் பாலைவனம் / அரை பாலைவனம். பைன் மரங்கள் வேர்கள்மண்ணை இறுக்கி பிடித்து, மண் அரிப்பு, புயல் காற்றால் மண் பறப்பதைதடுக்கும்.நெகிவ் பாலைவனம் விரிவடைவதை தடுக்க இது முக்கியமாகஇக்காடுகள் உருவாக்கப்படுகின்றன.
2. காலநிலை மாற்றத்தை சமாளிக்க
பைன் காடுகள் CO2-வை உறிஞ்சி, ஆக்ஸிஜன் தரும். மத்திய தரைக்கடல்பகுதியின் வெப்பத்தை குறைத்து மழை வர வாய்பை அதிகரிக்கும். "Green Belt" உருவாக்குவதே நோக்கமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
நீலகிரியின் மண்ணுக்கு இயற்கையின் கொடையாக காடுகள்அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதிலும் குறிப்பாக இந்த பைன்
மரங்கள் வளர்ப்பு என்பது மழைநீரை உறிஞ்சி நிலத்தடி நீரை அதிகரிக்கும். வெள்ளம் வரும்போது நீரை மெதுவாக வடிய வைத்து நீர் ஆவியாவதைகுறைக்கும். எனவே பொதுவாக இப்பகுதி கோடை காலத்திலும்'குளுகுளு' மயமாகவே இருக்கும்.மொத்தத்தில் ஏசியில் இருக்கும் உணர்வை புரியமுடியும்.
1947 இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின்பல பகுதிகளில் பைன் காடுகள்நடப்பட்டன. காடுகள் இயற்கையான தடுப்பு சுவர் போலவும், மண் சரிவைதடுக்கவும் பயன்பட்டன. இன்றும் எல்லை பகுதிகளில் இந்த திட்டம்தொடர்கிறது.
உதகையில் கூடலூர் செல்லும் சாலையில் பல பகுதிகளில் உருவாக்கப்பட்டபைன் காடுகள் இன்று மக்கள் picnic போகும் இடங்கள். நாட்டின் அழகைஅதிகரித்து சுற்றுலாவையும் வளர்க்கிறது.
பாலை நிலத்தில் முதலில் வளரக்கூடிய மரம் பைன். இலைகள் மட்கிமண்ணுக்கு உரமாகும். அதனால் இம்மரங்கள், நடப்பட்டு வளர்க்கப்பட்டுஇன்று 'பைன்' மரக்காடாக அழகாக சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது.
நாட்டை பசுமையாக்க, பாலைவனத்தை தடுக்க, தண்ணீர் காக்க, காலநிலையை சரி செய்ய, மக்களுக்கு நிழல் தரவும் குறிப்பாக சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் லட்சக்கணக்கான பைன் மரங்கள் சுற்றுலாப்பயணிகளின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளன.
பேரா.மூர்த்தி லிங்கா கவுடர்