உருது மொழி மற்றும் கலாச்சார மேம்பாட்டு சங்கத்தின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது

உருது மொழி மற்றும் கலாச்சார மேம்பாட்டு சங்கத்தின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் தென்காசியில்  நடைபெற்றது

 

0cdb45df-d392-46b9-9bbe-7e5f27231f1d.webp

உருது மொழி மற்றும் கலாச்சார மேம்பாட்டு சங்கத்தின் அறிமுகஆலோசனைக் கூட்டம் 04.07.2026 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் தென்காசி கோல்டன் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.


 

கூட்டத்திற்கு இந்தியன் பெஸ்ட் சேவா ரத்னா விருது பெற்ற சமூக சேவகர் A. சுலைமான் சேட் அவர்கள் தலைமை தாங்கினார். S. வகிதா பானு அவர்கள்இறைவனைப் போற்றும் உருது பிரார்த்தனையுடன், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.


 

சிறப்பு விருந்தினர்களாக மதுரை வக்ஃப் போர்டு கல்லூரியின் உருதுபேராசிரியர் பேராசிரியர் H. அப்துல் ரஹ்மான், சங்கத்தின் பொதுச்செயலாளர் A. ஐயூப் கான் (காஞ்சிபுரம்), பொருளாளர் முனைவர் B. ஷேக்நூர்தீன் (பண்ருட்டி), A.S. முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினர்.


 

மேலும் தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கடலூர், திருச்சி, திருநெல்வேலிஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் மாவட்டத் தலைவர்கள் மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 

கூட்டத்தில் உருது மொழி மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில், அந்தப்பழமையான மொழியையும் அதன் கலாச்சாரம், பண்பாடு மற்றும்பாரம்பரியத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


 

அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் சங்க அமைப்புகளைவலுப்படுத்துதல், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனைக் கூட்டங்களைதொடர்ந்து நடத்துதல், பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரையும்உறுப்பினர்களாக இணைத்தல், உருது மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட மக்களை ஒருங்கிணைத்தல், மொழி வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்குறித்து ஆலோசிக்கப்பட்டது.


 

இந்தக் கூட்டத்திற்கு 70 நபர்கள் கலந்து கொள்வார்கள் என ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சுமார் 120 மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


 

நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மேலும், இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை தமிழ்நாட்டின் அனைத்துமாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்துவது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது

 

 

79293b82-5fe1-4f97-8829-83fe135ddd1b.webp

 

 

 

Emoji

+ 91 70106 21701

தொடர்பு எண் அறிவிக்கப் பட்டது


 

தென்காசி மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த அறிமுக ஆலோசனைக்கூட்டம் உற்சாகமான பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.


 

இறுதியாக சப்ரின் பீமா சபர்தீன் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துநன்றியுரை ஆற்றினார்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy