ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆய்வு : ரசாயன கழிவுகள் மற்றும் குவியல் குவியலாக செல்லும் நுரைகளை பார்வையிட்டார்!

ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆய்வு : ரசாயன கழிவுகள் மற்றும் குவியல் குவியலாக செல்லும் நுரைகளை பார்வையிட்டார்!

ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில்குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் மற்றும் கழிவு நீர் குறித்துசமூக வலைதளங்களில் வைரலாக பரவியது,இதை சோசியல் மீடியாஇன்பிளுன்சர்களும் பேசினார் இதையடுத்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி கே ராஜுவ் அவர்கள் இன்றுஆய்வு மேற்கொண்டார் 

4ef8dd1a-efe2-4d02-919d-f886ca059f29.webp

அப்போது அவர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில்மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படும் இடம் மற்றும் தென்பெண்ணைஆற்றில் ரசாயன நுரைகள் செல்லும் இடங்களை பார்வையிட்டார்


 

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில்தற்போது 42.15 அடிவரை சேமிக்கப்பட்டு உள்ளது அணைக்கு வினாடிக்கு1057 கன அடி நீர் வரத்தாக உள்ள நிலையில் அணையில் இருந்து அதேஅளவு நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறதுஇதனால் அணைப்பகுதியில் வெள்ளை போர்வை போர்த்தியது போலறுரைகள் காணப்பட்டது இந்த ரசாயன நுரைகள் சமீப காலமாக அப்பகுதியில்வீசும் பலத்த காற்றுக்கு அந்தப் பகுதி உள்ள விவசாய தோட்டங்கள் மற்றும்சாலை பொதுமக்கள் மீது விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன


 

தற்போது சமூக வலைத்தளங்களில் கெலவரப்பள்ளி அணையை காப்போம்என்ற குரல்கள் ஒலிக்க தொடங்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக தமிழகஅமைச்சர் வி கே ராஜு கெலவரபள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி KRP அணையிலும் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார்  மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் அவருக்குஅனைப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் நிலவரங்கள் குறித்துஎடுத்துரைத்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy