சேலம் மாவட்டத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின அனுசரிப்பு...
சேலம் மாவட்டத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின அனுசரிப்பு...
இனியா நாட்டிய கலைக்கூடத்தின் பரதநாட்டியம் அரங்கேற்ற விழா சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு இனியா நாட்டியக் கலைக்கூடத்தின் நிறுவனர் ஜீவா சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இராசி சரவணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக சேலம் பரதநாட்டிய ஆசிரியர்கள் சங்க தலைவர் லதா, சேலம் இசைப்பள்ளி ஆசிரியர் ரமாதேவி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
இனியா நாட்டிய கலைக்கூடத்தின் மாணவிகள் அனுஸ்ரீ, யுவஸ்ரீ, விபஞ்சியா, தன்யா, ரிதன்யா, சௌமியா, கிருத்திகா, ஸ்ரீவர்ஷினி, மோனிஷா, லக்ஷனா ஆகியோர் பல்வேறு பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினர்.

இந்நிகழ்ச்சியில் அரிபுத்திரன், லோகநாதன், ராஜகோபால், பொட்டு ஞானசேகரன், ஏ.லோகநாதன், நந்தினி, பங்கஜம், கனகராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜானகி, தமிழ்ச்செல்வி, பொட்டு பிரகாஷ், பொட்டு மணியன், மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் குமரகிரி கோயில் முன்னாள் அறங்காவலர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.
Publisher
சேலம் மாவட்டத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின அனுசரிப்பு...
These cookies are essential for the website to function properly.
These cookies help us understand how visitors interact with the website.
These cookies are used to deliver personalized advertisements.