கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்களின் கோரிக்கையான குடிக்க குடிநீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஒன்றிய கவுன்சிலர் போந்தூர் செந்தில்ராஜன்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருமதூர் ஒன்றியம் அதிமுக மாவட்ட துணை செயலாளர் போந்தூர் ஒன்றிய கவுன்சிலர்மாக செந்தில் ராஜன் மக்கள் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் திருபெரும்புதூர் ஒன்றியம் பென்னலூர் ஊராட்சி பீமன்தாங்கல் பகுதியில் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் பொதுமக்களின் கோரிக்கையான குடிக்க குடிநீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அவருடைய சீரிய முயற்சியினால் தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலமாக 6.50 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்க ஆர்.வோ. பிளான்ட் அமைக்கப்பட்டது.
அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று ஒன்றிய கவுன்சிலர் போந்தூர் செந்தில்ராஜன் கிராம பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ஒன்றிய கவுன்சிலர் போந்தூர் செந்தில்ராஜன் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.