தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை வழக்கு: முதல் சாட்சி தங்கவேல் மீது கொலை முயற்சி – கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை வழக்கு: முதல் சாட்சி தங்கவேல் மீது கொலை முயற்சி – கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வழக்கறிஞர் முருகானந்தம்படுகொலை வழக்கின் முதல் சாட்சியான தங்கவேல் மீது இன்று அதிகாலைகொலை முயற்சி நடைபெற்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் அடுத்துள்ள கணபதிபாளையம் அருகே செட்டியார் தோட்டம்பகுதியில் இன்று காலை சுமார் 5 மணியளவில் தங்கவேல் பால் வாங்கச்சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்ததாகக் கூறப்படும்கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அவரை சுற்றி வளைத்து கூர்மையானஆயுதங்களால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் தங்கவேலின் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம்ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் கோவை மாவட்டம் சூலூரில்உள்ள கே.எம்.சி.எச். (KMCH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரசிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாராபுரம் காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில்ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy