கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகமருகேயே சாலையில் கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் அவல நிலை,

கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகமருகேயே  சாலையில் கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் அவல நிலை,

கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகமருகே  சாலையில்கழிவுநீரால் துர்நாற்றம் வீசும் அவல நிலை, மாநகராட்சி மெத்தனம்,மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை

 

கோவில் மாநகரமான காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டுமான பணிகள்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தமாநகராட்சி கட்டிடம் அருகே பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் ஆலயம், சித்ராகுப்தர் கோவில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம்,  திரையரங்கம்  பல்வேறு உணவகம் & முக்கிய வியாபார ஸ்தலங்கள்உள்ளன.


 

இந்த நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து கச்சபேஸ்வரர் ஆலயம்செல்லும் அந்த முக்கிய சாலையில்  பல நாட்கள் மேலாக கழிவுநீர்வெளியேறி மிகுந்த துர்நாற்றம் வீசுகின்றது.


 

பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ள நிலையில்தற்காலிகமாக சில முறை கழிவு நீரை தூய்மை செய்யும் நிலையில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நடந்து செல்வோர் என அனைவரும்மூக்கை மூடிக் கொண்டு செல்லும் அளவில் கடும் துர்நாற்றம் வீசுகின்றது.


 

மேலும் வரும் 12ஆம் தேதி பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் ஆலயத்தின்தங்கத்தேர் நான்கு ராஜ வீதிகளில் உலாவில் மூன்று அமைச்சர்கள்பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற உள்ளது.


 

எனவே கோவில் நகரம், பட்டுக்கு பெயர் போன நகரம் என விலங்கும் காஞ்சிமாநகராட்சி அருகே மனிதக் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசும் அவலநிலை உள்ளது.


 

மிகவும் மெத்தனமாக செயல்படும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்துநடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம்விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

6960c911-a1f8-4b1f-9a1e-5c98be42af36.webp
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy