சிறுமி குளிப்பதை இளைஞர் வீடியோ எடுத்த விவகாரம்: மதுபாட்டில் பதுக்கி விற்றதாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்ததின் உள்நோக்கம் என்ன?.

சிறுமி குளிப்பதை இளைஞர் வீடியோ எடுத்த விவகாரம்: மதுபாட்டில் பதுக்கி விற்றதாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்ததின் உள்நோக்கம் என்ன?.

தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமியாகும் . இந்த சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்ததிருமணமான 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் , கடந்த சிலநாட்களுக்கு முன் , சிறுமி அவரது வீட்டில் குளிப்பதை ரகசியமாக செல்போன்மூலம் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு , சமூக வலைதளங்களில் பரப்பிடமுயற்சி செய்ததாக கூறப்படுகிறது . சிறுமி குளிப்பதை இளைஞர் வீடியோஎடுத்து விவகாரம் , அந்த கிராமத்தில் தகவல் தீயாக பரவியது . இதனைஅறிந்த கிராம மக்கள் , ரகசியமாக வீடியோ எடுத்த அந்த இளைஞரை பிடித்துஅடித்தாகவும் கூறப்படுகிறது . இதுகுறித்து தகவல் அறிந்தஅதியமான்கோட்டை போலீசார் சம்மந்தப்பட்ட இளைஞரை நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் . போலீஸ் ஸ்டேஷனில் இளைஞரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது , சிறுமியின் பெற்றோரிடம் , சிறுமி குளிப்பதைவீடியோ எடுத்த இளைஞர் தரப்பினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்இணைந்து , போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என கூறி , கட்டப்பஞ்சாயத்து பேசி உள்ளனர் .  

இதற்கிடையில் சம்மந்தப்பட்ட அதியமான்கோட்டை போலீசாரும்விசாரணைக்கு அழைத்துச் வந்த இளைஞரிடம் , சிறுமி குளிக்கும் வீடியோஆதாரங்கள் அவரது செல்போனில் இருந்தும் , அந்த இளைஞர் மீது , சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவத்தின் கீழ் கைது நடவடிக்கைமேற்கொள்ளாமல் , இளைஞர்     அவரது வீட்டில் சட்டவிரோதமாகமதுபாட்டில்கள் பதுக்கி விற்றதாக கூறி 35 மதுபாட்டில்களை பறிமுதல்செய்து , அந்த இளைஞரை கைது செய்து தருமபுரி மாவட்ட சிறையில்போலீசார் அடைத்துள்ளனர் . சிறுமிக்கு எதிராக குற்ற சம்பவம் நிகழ்ந்ததுபோலீசார் தரப்பில் தெரிந்தும் , ஊர் கட்டப்பஞ்சாயத்து முடிவுக்கு ஏற்றார்போல்காவல் நிலைய போலீசாரும் செயல்பட்டுள்ள சம்பவம்கண்டிக்கத்தக்கதாகும் . மேலும் சிறுமிக்கு எதிரான குற்ற சம்பவத்தின்கீழ் , இளைஞரை கைது செய்வதை கைவிட்டு , எதற்காக வீட்டில் மதுபானங்கள்பதுக்கி விற்றதாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளதன்     உள்நோக்கம் என்ன என மகளிர் அமைப்புகள் பல்வேறு கேள்விகள்எழுப்பியுள்ளனர் . தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி , சிறுமிவிவகாரத்தில் , உரிய நடவடிக்கை எடுக்காமல் இளைஞரை தப்பிக்கும்வகையில் செயல்பட்டுள்ள , காவல் நிலைய போலீசார் மீதும் தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு மகளிர் அமைப்புகள் தரப்பில்கோரிக்கை விடுத்துள்ளனர் .  

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy