தமிழ்நாடு பத்திரிககையாளர் சங்க மாவட்ட கூட்டம் தருமபுரி நட்சத்திர ஹாலில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
மாவட்ட செயலர்ளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார்.
மண்டல செயலாளர் காதர் மொய்தீன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் ராமதாஸ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் சுபாஷ் அவர்கள்
புதிய மாவட்ட செயலாளர் ராஜ்குமார் அவர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தி வைத்து, . பத்திரிகையாளர்களுக்கு சங்க உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி விழா பேரூரை ஆற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் செளமியா அன்புமணி அவர்கள் கலந்துகொண்டு மூத்த பத்ரிகையாளர்கள் முரசொலிமணி, மாமணி, கோபால், சோமசுந்தரம், சீனிவாசன், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், குமரன், புகழேந்தி, ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர், அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு தனியார் பேருந்து இலவச பயண அடையாள அட்டை மற்றும் சங்க புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக இலவச வீட்டு மனை பட்டா மற்றும் காட்சி ஊடகத்திற்கு ஓய்வூதியம் வழங்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டவர் பத்திரிகையாளர்களுக்காக எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கின்றேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் முன்னாள் பாமக எம்.எல்.ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில, மாவட் நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட மாவட்டத் துணைச் செயலாளர் அருண்குமார் நன்றி உரை ஆற்றினார்.