தர்மபுரி மாவட்ட ஆட்சியரை புறக்கணிப்பு செய்து, ரூ.905 கோடியில் நடந்து வரும் தொப்பூர் கனவாய் மேம்பால திட்ட பணியை ரகசிய ஆய்வு நடத்தி வீடியோ வெளியிட்டு அரசியல்செய்த தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர்: ஆளும் கட்சியினர் குற்றச்சாட்டு.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கனவாய் பகுதியில் விபத்துகளை தடுக்க ரூ.905 கோடி மதிப்பீட்டில், 83 தூண்களுடன், மலைப்பாதையில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியாவின் மிக நீண்ட சாலையாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண்-44 தர்மபுரி மாவட்டம் வழியாக செல்கிறது. இவ்வாறு நடந்து வரும் தேசிய நெடுஞ்சாலை மேம்பால திட்டப்பணிகளை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய சேலம் திட்ட இயக்குனர் ஸ்ரீநிவாசுலு தலைமையிலான அதிகாரிகள் சிலர், ஜூன் 15-ம் தேதி அன்று ரகசியமாக ஆய்வு நடத்தி, சாலை எப்படி அமையும் என்பது குறித்த வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு திட்ட பணிகளை ஆய்வு செய்ய வந்த சம்மந்தப்பட்ட அதிகாரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்திற்க்கும், இந்திய ஆட்சிப் பணியாளரான கலெக்டர் சரவணன் அவர்களுக்கு, எந்த தகவலும் தெரிவிக்காமல், அரசியல் பால்டீக்ஸ் செய்யும் நோக்கில், இந்த ஆய்வு பணியை அதிகாரி மேற்கொண்டுள்ளதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஜோசப் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, அவரது தலைமையில் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய ஆட்சிப் பணியாளராகவும், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள், கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
மேலும் ஆட்சியர் சரவணன் மேற்பார்வையில் தான், மாநில அரசு மற்றும் மத்திய அரசு திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் தருமபுரி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் 905 கோடியில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கனவாயில் நடந்து வரும் மேம்பாலப் திட்டப் பணிக்கு மட்டும் ஆட்சியருக்கே தகவல் தெரிவிக்காமல், இந்திய தேசிய நெடுஞ்சாலை சேலம் திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாசலு மேற்கொண்டுள்ள அவரின் ரகசிய ஆய்வின் உள்நோக்கம் என்ன, அரசியல் பால்டீக்ஸ் ஏதாவது செய்கிறாரா என, ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரை புறக்கணிப்பு செய்து, 905 கோடியில் நடக்கும் தொப்பூர் கனவாய் பிரம்மாண்ட மேம்பால பணியை ஆய்வு செய்து, அந்த சாலை எவ்வாறு அமையும் என்ற வீடியோ வெளியிட்டுள்ள, இந்திய தேசிய நெடுஞ்சாலை சேலம் திட்ட இயக்குனர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆளும் கட்சி உள்பட அதன் கூட்டணி கட்சியினர் தரப்பில் இவ்வாறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.