முன்னாள் முதல்வர்கள் போட்டோ சர்ச்சை...கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு...

முன்னாள் முதல்வர்கள் போட்டோ சர்ச்சை...கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு...

கோவை மாநகராசி மாமன்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் போட்டோவை மாட்ட திமுக காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி முயன்றதால் வாக்குவாதம் சலசல்ப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில், பல மாதங்களுக்குப் பிறகு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் மேயர் ரெங்கநாயகி தலைமை தாங்கினர்.

அப்போது மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலரை அழைத்து, அரசாணைப்படி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைபப்டத்தை வைக்க வேண்டும் வைத்தால்தான் கூட்டத்தை நடத்த முடியும் என்றார். அப்போது முன்னாள் முதல்வர் காமராஜரின் படத்தை மாநகராட்சி மன்றத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் “காங்கிரஸ் ஒழிக” என முழக்கமிட்டனர். அதற்கு பதிலடியாக காங்கிரஸ் உறுப்பினர்கள் “திமுக ஒழிக” என கோஷமிட்டதால் கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, “கோவை மாநகராட்சியை கலைக்க வேண்டும்” என்ற வாசகத்துடன் அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கொண்டு வந்திருந்த போஸ்டரை, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பிடுங்கி கிழித்தனர்

இதனால் மாமன்ற கூட்டத்தில் கடும் அமளி மற்றும் வாக்குவாதம் நிலவியதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவி தேஜா அரசாணைபப்டி முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைபப்டம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து மேயர் மேஜையில் வைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைபப்டம் வைத்த பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்ற கூட்டம் துவங்கியது. 

இதில் காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபால், டாக்டர் காயத்ரி,சங்கர்,நவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy